இராணுவத்தின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிப்பு – எழிலன்
சிறீலங்கா அரசாங்கத்தால் வாகரையின் தெற்கு கரையோர பகுதி வழியாக பனிச்சங்கேணி நோக்கி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் 19 பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும் 50 பேர் காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
27 பொதுமக்கள் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தனது உதவியை வழங்க தயாராக இருந்தபோதும் சிறீலங்கா இராணுவம் அதற்கு இடமளிக்கவில்லை. இதேவேளை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரது வாகரைப் பகுதியை நோக்கிய பயணமும் தடைப்பட்டுள்ளதாகவும் மேலும் அறியமுடிகிறது.
சில பொதுமக்கள் தமது சொந்த முயற்சியின் பிரகாரம் வள்ளங்கள் ஊடாக கடும் எறிகணைக்கு மத்தியில் காயமடைந்தவர்களை மட்டக்களப்புக்கு எடுத்துச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Sunday, December 10, 2006
இராணுவத்தின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால்..
Sunday, December 10, 2006





