அம்பாறை விசேட அதிரடிப்படை முகாங்களிலிருந்து தொடர் எறிகணைத் தாக்குதல்கள். அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடியாறு மற்றும் சங்கமன்கந்தை ஆகிய பிரதேசங்களில் உள்ள விசேட அதிரடிப்படையினரின் முகாம்களில் இருந்து இன்று காலை 7.30 மணி தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களை நோக்கி தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத்தாக்குதல்கள் காரணமாக இப்பிரதேசங்களில் பாரிய சத்தங்களை கேட்கக்கூடியதாக இருந்தது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.





