யாழில் கிணற்றிலிருந்து இளைஞரின் முண்டம் மீட்பு யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கரம்பன் என்னும் இடத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஒரு இளைஞரின் முண்டம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பி;ட்ட முண்டம் கால் கைகள் தலை வெட்டப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. நேற்று நன்பகல் இந்த சடலம் கிணற்றில் இருந்து வீசிய துர்நாற்றத்தைத் தொடர்ந்து மீட்க்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வயது மதிக்கத்தக்கவரான இச் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. குறிப்பிட்ட சடலம் முட்கம்பியினால் பினைக்கப்பட்டு கிணற்றில் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் கடந்த நாட்களில் இனம் தெரியாத ஆயுததாரிகள் எனத் தெரிவிக்கப்பட்டு தீவகத்தில் நடமாடிய ஈ.பி.டி.பி மற்றும் படைப் புலனாய்வாளர்களினால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களின் சடலமாக இருக்கலாம் என அப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள்.





