Thursday, November 30, 2006

தமிழ் இளைஞர்களை கொல்லும் முகமூடிக் கொலைகாரர்கள்

தமிழ் இளைஞர்களை கொல்லும் முகமூடிக் கொலைகாரர்கள் [30 - November - 2006] -தனுஷ்கோடியில் அகதிப் பெண் தெரிவிப்பு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் முகமூடி அணிந்தவர்கள் நுழைந்து அப்பாவி இளைஞர்களைக் கொன்று குவிப்பதாக தனுஷ்கோடி வந்த இலங்கை ஆசிரியை ஷ்ரீபிரியா கண்ணீர் மல்க தெரிவித்தார். இது குறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "இலங்கை வவுனியா நகர் இலுப்பைக்குளம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக முகமூடி அணிந்து இரு சக்கர வாகனங்களில் வரும் சிலர், வீதியில் நடந்து செல்லும் அப்பாவி இளைஞர்களை வெட்டி படுகொலை செய்துவிட்டு ஓடி விடுகின்றனர். தற்போது நடந்து வரும் சண்டை எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. நான் வவுனியா பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றி வந்தேன். அங்கு ஒவ்வொரு நாளும் எதிர்நீச்சல் போட்டுத்தான் வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை உள்ளது. உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் இலங்கையில் வசதி படைத்தவர்கள் மட்டும் வாழ முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது" என்றார் அவர்.