இந்திய - சிறீலங்கா கூட்டு கடற்படை சுற்றுக்காவல் நடவக்கை தொடர்பாக ஆராயப்படும் - ஐனாதிபதி இன்று சனிக்கிழமை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது விஜயத்தின் போது பாக்கு நீரிணையில் இந்திய - இலங்கை கடற்படை கூட்டு சுற்றுக்காவல் நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடபடும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் கடற்புலிகளின் நடவடிக்கைகளை குறிப்பிட்ட அளவு மட்டுப்படுத்த முடியும் என மகிந்த எண்ணியுள்ளார். இதேநேரம் இக்கூட்டு சுற்றுக்காவல் நடவடிக்கைகள் மூலம் மீனவர்களின் பாதுகாப்பு பலப்ப்டுத்தப் படுவதுடன் சட்டவிரோத குடியேற்றம் போதை பொருள் மற்றும் ஆயுத கடத்தல் என்பன தடுக்கப்படும்,மேலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் பெறுவது தொடர்பான விடயமும், தற்போது இரு நாடுகளிற்கு இடையே இடம்பெறும் இரண்டு பில்லியன் ரூபா வர்த்தகத்தினை மேலும் அதிகரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளிகிழமை ஊடகவியலளர்க்ளிற்கு கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.





