Saturday, November 25, 2006

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு யாழில் செய்தித் தணிக்கை

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு யாழில் செய்தித் தணிக்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு மாவீரார் நாள் நிகழ்வுகளை செய்திகளாகப் பிரசுரிக்கக் கூடாதென அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளதாகக தெரியவருகின்றது. மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றுடன் ஐந்தாம் நாள் இடம் பெறுகின்ற போதிலும் யாழ் குடாநாட்டில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளான எந்த வொரு பத்திரிகையும் வன்னியில் இடம்பெறும் நிகழ்வுகளை பிரசுரிக்கவில்லையென பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். அரசாங்கம் தாம் எந்த சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கு எந்த வகையான தடைகளையும் ஏற்படுத்தப் போவதில்லையென்று கூறிக் கொண்டு யாழ் குடாநாட்டுப் பத்திரிகைகளுக்கு வெளியிடப்படாத தணிக்கையொன்றை துப்பாக்கி முனையில் மேற்கொண்டுவருகின்றது என யாழ் குடாநாட்டு கல்வியலாளர்கள் உட்பட அனைவரும் தெரிவிக்கின்றார்கள். இதன் ஒரு கட்டமே தற்போது இடம் பெற்று வரும் மாவீரர் நாள் நிகழ்வுகளை வெளிவரவிடாது பத்திரிகைகளுக்கு எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளதாகவும் பொது மக்களும் கூறுகின்றார்கள்.