யாழ் பாடசாலைகளில் மாவீரர் நாள் பதாதைகள் யாழ் குடாநாட்டுப் பாடசாலை வளாகங்களில் மாவீரர் நாள் பதாதைகள் மாணவர்களினால் கட்டப்பட்டு வருகின்றது பல பாடசாலைகளில் கட்டப்பட்ட பதாதைகள் இன்று இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ள போதிலும் மாணவர்கள் தொடர்ந்து இத்தகைய பதாதைகளை தொடர்ந்து கட்டிக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மாணவர்கள் கட்டும் பதாதைகளை அறுக்கும் நடவடிக்கையில் படைத்தரப்பினர் முழு மூச்சாக ஈடுபடுகின்ற போதிலும் மாணவர்களும் தமது முயற்சியை கைவிடாது பதாதைகளை தொடர்ந்து கட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் பாடசாலைகளில் மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகவும் எழுச்சிகரமாக நடத்த மாணவர்கள் முன்முயற்சிகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





