மாவீரார் நினைவுநாள் சோடனைகள் படையினரால் அறுத்தெரியப்பட்டன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவு நாளையொட்டி சோடனை செய்யப்பட்ட கொடிகள் காட்டு மிராண்டித்தனமான முறையில் இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அறுத் தெறியப்பட்டுள்ளன பல்கலைக் கழக மாணவர்களினால் கடந்தாண்டு மாவீரர் நினைவுத் தூபி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் நுழைந்த இராணுவத்தினர் மாவிரார் நினைவுத் தூபியை உடைத்து தமது வெறியை வெளிப்படுத்தி சென்றார்கள் இத்தகைய நிலமையில் மாணவர்கள் கடந்த வாரம் மாவிரர் நினைவுத் தூபியை திருத்தம் செய்து இந்தாண்டும் குறிப்பிட்ட இடத்தில் மாவீரார் நினைவு நாளை கொண்டாடி வருகின்றார்கள் இத்தகைய நிலமையில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் துப்பாக்கிகள் சகிதம் பல் கலைக்கழகத்தின் சுற்றாடலில் வந்த இராணுவத்தினர் வீதியில் அலங்கரிக்கப்பட்டு இருந்த சிவப்பு மஞ்சல் நிறக் கொடிகளையும் பதாதைகளையும் அறுத்தெரிந்து வெறியாட்டம் ஆடிவிட்டுச் சென்றுள்ளதுடன் எச்சரிக்கையும் செய்துவிட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது இதே நேரம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பேராசிரியர்களும் எச்சரிக்கைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





