Friday, November 24, 2006

காரைதீவு விசேடஅதிரடிப் படையினரால் இன்றுகாலை ...

காரைதீவு விசேடஅதிரடிப் படையினரால் இன்றுகாலை குடும்பஸ்தர் சுட்டுக்கொலை! அம்பாறை-கல்முனை பிரதேசத்தில் சிவன்கோயில் வீதியில் வைத்து இன்று காலை குடும்பஸ்தர் ஒருவர் விசேடஅதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்றுகாலை 8மணியளவில் சிவன்கோயில் பிரதேசத்தை சுற்றிவளைத்த சுமார் 30க்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர்- இவரது வீட்டுக்குச்சென்று சுமார் ஒரு மணிநேரம் விசாரணைசெய்தபின் வீதிக்கு அழைத்துச்சென்று சுட்டுவிட்டுச்சென்றுள்ளனர். சிவன்கோயில் பிரதேசத்தில் வசித்துவரும் காந்தன் (வயது25) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார். பல வயல்நிலங்களுக்கு உரிமையாளரான இவர் திருமணம்முடித்து 2மாதங்களே ஆகின்றமை குறிப்பிடத்தக்கது. கருணாகுழு முக்கியஸ்தர் பிரதீபன் இவரை பணம்கேட்டு மிரட்டியதாகவும் இதுதொடர்பாக இவர் காரைதீவு விசேடஅதிரடிப்படையினரின் முக்கிய அதிகாரியான ஜெயதிலக என்பவரிடம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் முறையிட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பின்னர் இன்றுகாலை 9மணியளவில் இவர் விசேடஅதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவரது சடலம் தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.