வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினரால் 6 இளைஞர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா நகரிலிருந்து மேற்குப் பகுதியில் 30 கிலோ மீற்றர் தொலைவில் வவுனியா-மன்னார் வீதியில் கணேசபுரத்துக்கு அருகில் உள்ள கன்னட்டி என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
ஆனால் சிறிலங்கா இராணுவமோ வழமை போல் கைக்குண்டுத் தாக்குதல் நடத்த ஊடுருவியவர்களே இந்த இளைஞர்கள் என்றும் 5 பேர் தங்களது பதில் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் ஒரு இளைஞர் கைக்குண்டை வெடிக்க வைத்து இறந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இளைஞர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை கைப்பற்றியதாகவும் சிறிலங்கா இராணுவத்தினர் கூறியுள்ளனர்.வவுனியா மருத்துவமனைக்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் கொண்டுவரப்பட்ட 6 இளைஞர்களின் உடல்களையும் வவுனியா மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பார்வையிட்டார்.
சம்பவ இடத்துக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகள் வாக்குமூலம் அளிக்க அவர் உத்தரவிட்டார்.





