கணவன்மாரை இழந்த பெண்களுக்கு பராமரிப்பு மையம் மட்டக்களப்பு மைலம்பாவெளியில் நேற்று யுத்தம் மற்றும் ஆழிப்பேரலை தாக்கங்களினால் கணவன்மாரை இழந்த பெண்களையும் அவர்களின் பிள்ளைகளையும் பராமரிப்பதற்காக நவீன வசதிகளை கொண்ட பராமரிப்பு மையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இத்தாலி. கஸகஸ்தான் மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளை சேர்;ந்த தனவந்தர்களின் 130 மில்லியன் ரூபா செலவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 10 கணவன்மாரை இழந்த பெண்களும் 100 ஆதரவற்ற சிறுவர்களும் இங்கு பராமரிக்கப்படவுள்ளனர்.





