Thursday, November 23, 2006

அம்பாறையில் எதிர்பாராத மோதல் அதிரடிப்படையினர்...

அம்பாறையில் எதிர்பாராத மோதல் அதிரடிப்படையினர் ஐவர் பலி! மேலும் ஐவர் படுகாயம். அம்பாறை மாவட்டம் 11ம் கொலனியில் சிறீலங்கா காவல்துறையினர் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 9 மணியளவில் அம்பாறை 11ம் கொலனி கொத்தியாபுரத்தில் சிங்கள விவசாய மக்களுக்கு பாதுகாப்பு வழங்கச் சென்ற சிறீலங்காப் அதிரடிப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே திடீர் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது சிறீலங்கா அதிரடிப்படையினர் 5பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 5 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். படுகாயமடைந்த அதிரடிப்படையினர் அம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் நிலமைகளைப் பார்வையிட்டதுடன் பொதுமக்கள் நோக்கி மோட்டார் எறிகணைத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.