முல்லைத்தீவில் விமானப்படை கீபிர் ஜெட்கள்
வான்தாக்குதல்
இன்று வியாழன் காலை ஸ்ரீலங்கா விமானப்படையின் கிபிர் ஜெட்கள் முல்லைத்தீவிலுள்ள விடுதலைப்புலிகளின் கடற்படை தளங்கள் மீது வான் தாக்குதல் நடத்தியதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலின் போதான சேதவிபரங்கள் இன்னும் தெரியவில்லை. அதேவேளை அம்பாறை 11 வது மைல் பொலிஸ் காவல் நிலையம் மீது இன்று காலை 10.00 மணியளவில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட மோட்டார் மற்றும் துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு பொலிஸாரும் ஒரு ஊர்காவற் படைவீரரும் பலியானதுடன் 5 பேர் காயங்களுடன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை முகமாலை முன்னரங்க பகுதியில் விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல் தொடர்ந்ததாகவும் இராணுவத்தரப்பு நமது செய்தியாளருக்கு தெரிவித்தது.
Thursday, November 23, 2006
முல்லைத்தீவில் விமானப்படை கீபிர் ஜெட்கள் வான்தாக்குதல்
Thursday, November 23, 2006





