Thursday, November 23, 2006

வாகரையில் முன்னேற்ற முயற்சி புலிகளால் முறியடிப்பு

வாகரையில் படையினரின் முன்னேற்ற முயற்சி புலிகளால் முறியடிப்பு -இளந்திரையன். வாகரையில் இன்று காலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்றமுயற்சி புலிகளின் கடுமையான எதிர்ச்சமரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகங்களிற்கு தெரிவித்திருக்கும் விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இ.இளந்திரையன் மாங்கேணி மற்றும் கஐவத்தா படைமுகாம்களில் இருந்து படையினர் பல்குழல் மற்றும் ஆட்லறி எறிகணைச் சூட்டதரவுடன் யுத்த டாங்கிகள் சகிதம் புலிகளின் கட்டுப்பட்டுப்பகுதிகளை நோக்கி வலிந்த முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர். இதனை அடுத்து வெடித்த உக்கிரசமரில் யுத்த சூனியப்பிரதேசத்தில் வைத்து சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி போராளிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.