யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வார மூன்றாம் நாள் நிகழ்வுகள். மாவீரர் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று காலை 9.45 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றது மாணவர் மன்றப் பிரதி நிதி தலைமையில் இடம் பெற்ற இன்றைய நிகழ்வில் ஈகைச்சுடரினை பல் கலைக்கழக பேராசிரியாகள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ மன்றப் பிரதிநிதிகள் ஏற்றி வைத்தார்கள் இதனைத் தொடர்ந்து மலரஞ்சலி நிகழ்வும் அதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகளை மாணவமன்றப் பிரதிநிதிகள் நிகழ்த்தினார்கள். இன்றை நிகழ்வுகளில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் காலையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும் நினைவாலயப் பகுதி சிவப்பு மஞ்சல் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.





