Thursday, November 23, 2006

மாதவாச்சி சோதனைச் சாவடி மீது தாக்குதல்..

மாதவாச்சி சோதனைச் சாவடி மீது தாக்குதல் 3 ஊர்காவற்படையினர் பலி. அனுராதபுரம் மாதவாச்சியில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் சோதனைச் சாவடி மீது இன்று அதிகாலை 2மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 ஊர்காவற்படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் 2 ஊர்காவற்படையினர் படு காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.