வாகரை நோக்கி சிங்களப் படைகள் பாரிய படைநடவடிக்கை
விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிங்களப் படைகள் இன்று பாரிய படை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாங்கிகள் கவச ஊர்திகளுடன் பெருமளவான படையினர் யுத்த சூனியப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கி நகர முயன்றவேளை விடுதலைப் புலிகள் படை நகர்விற்கு எதிராக தமது பதில் தாக்குதல்களை ஆரம்பித்தனர்.
இதனையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
படையினரின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்பான செய்தியை விடுதலைப் புலிகள் படைத்துறைப் பேச்சாளர் திரு. இராசையா இளந்திரையன் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
Thursday, November 23, 2006
வாகரை நோக்கி சிங்களப் படைகள் பாரிய படைநடவடிக்கை
Thursday, November 23, 2006





