Thursday, November 23, 2006

இனப்பிரச்சினை தீர்வுக்கு அதிகாரம் உச்ச அளவில்...

இனப்பிரச்சினை தீர்வுக்கு அதிகாரம் உச்ச அளவில் பகிரப்படவேண்டும் என்பதில் இந்தியா உறுதி என்னைத்தவிர அமைச்சில் அனைவரும் ஊழல் புரிகின்றனர் என்கிறார் அனுரா [Thursday November 23 2006 [virakesari.lk] இனப்பிரச்சினை தீர்விற்கு அதிகாரம் உச்ச கட்டத்தில் பகிரப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசாங்கம் மிகவும் உறுதியாக இருக்கின்றது. இந்தியாவில் ஏழு கோடி தமிழர்கள் இருக்கின்றனர் என்பதையும் தமிழ் நாட்டில் காங்கிரஸின்ஆட்சி நூலிழையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டார நாயக்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்று நடைபெற்ற வரவுசெலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது ; இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட இணைத்தலைமை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்றன. நாடு இன்று யுத்த கரங்களுக்குள் சிக்கி தவிக்கின்றது என்பதனால் சுற்றுலாத்துறை வெகுவாக வீழ்ச்சி கண்டு வருகின்றது. காலிதுறைமுகத்தின் மீது புலிகள் தாக்குதல்கள் நடத்திய போது சுற்றுலாத்துறை தளம் தாக்கியழிக்கப்பட்டு விட்டதாக கூறினர் . கடந்த 22 வருடகால யுத்தத்தின் போது புலிகள் சுற்றுலாத்துறையை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவில்லை. எனினும் இந்தோனேசியாவில் யுத்தம் நடந்த போது அங்கு சுற்றுலாத்துறையின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சுற்றுலாத்துறையின் மீது புலிகள் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்று உலக நாடுகளுக்கு தெளிவு படுத்த வேண்டியுள்ளது. அதற்கு பின்னரே சுற்றுலா துறையின் வளர்ச்சியை காண முடியும்.இலங்கையில் தான் மனித உரிமை மீறல்கள் விஞ்சியுள்ளன என்று பிரஞ்சு நாட்டு பிரதிநிதிகள் என்னிடம் கேட்டனர். எனது தேர்தல் தொகுதியில் கூட கொலை , கொள்ளை , கற்பழிப்புகள் அதிகரித்துச் செல்கின்றன. நாட்டைதோல்வியிலிருந்து காப்பாற்றி வாழ்வதற்குரிய நாடாக மாற்றுவதற்காக அனைவரும் பேதங்களை மறந்து கைகோர்ப்போம். ஜனாதிபதி இந்நாட்டையும் எங்களையும், காப்பாற்றுவார் என்று நினைக்கின்றேன், அதற்காக அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படவேண்டும். கட்சி சித்தாந்தம் என்னவாக இருந்தாலும் தோளோடு தோள் கொடுத்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக ஒன்று சேர வேண்டியுள்ளது. ஒன்று சேர வேண்டும்.கடந்த காலத்தை புதைத்து விட்டு சிறந்த நாட்டை உருவாக்குவதற்காக எதிர்காலத்தை தேடுவோம் . அதற்காக இந்நாட்டில் வாழ்கின்றவர்களுள் 85 வீதமான மக்கள் எம்முடன் இணைந்துள்ளனர். அதற்கான ஒரே வழி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதற்காக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரம் உச்சகட்டத்தில் பகிரப்படல் வேண்டும். அதனை நோக்கி நாம் நகர வேண்டும். அவ்வாறான தீர்வொன்றையே இந்தியா உள்ளிட்ட இணைத்தலைமை நாடுகள் உலக நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை 70 மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். காங்கிரஸ் ஆட்சி தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. ஆட்சி மாறினால் காந்தி, (சோனியா) மன்மோகன்சிங் வெளியேறி விடுவார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த முறை நாம் பேசியதையடுத்து நிருபமா ராவ் பீஜிங்கிற்கு மாற்றப்பட்டார். இந்தியா நமக்கு நண்பன் மட்டுமல்ல சுப்பர்பவர் கொண்ட நாடு. தான் காந்தி, இந்திராகாந்தி, ஜவகர்லால் நேரு போன்ற தலைவர்கள் உருவாகினார்கள். என்னைத் தவிர அனைவரும்ஊழல் செய்கின்றனர்.யுத்த கழுகுகளை விரட்டி பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்பதே சகலரினதும் நிலைப்பாடு ஆனால் ஊழல் அதிகரிக்கப்பட்டுள்ளது . எனது அமைச்சை தவிர பியோன் உள்ளிட்ட சகலரும் ஊழல் செய்கின்றனர்.நாங்கள் ஊழலில் ஈடுபட்டோம் என்று எங்கள் குடும்பத்தை நோக்கி யாரும் விரல் நீட்ட முடியாது. உயர் நீதிமன்றம் சுயாதீனமாக இயங்க வேண்டும் ஒரு நீதிமன்றம் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் வழங்க கூடாது. இனப்பிரச்சினைக்குரிய தீர்வு காணாமல் அபிவிருத்திக்கு திட்டமிட முடியாது. இனமோதல், யுத்தம் என்ற மையக் கருவுக்கு முடிவு காணப்படல் வேண்டும். இதற்கு முடிவு காணப்படாவிட்டால் முதலீடுகளுக்கு இடமில்லை. அபிவிருத்தியில் இந்தோனேசியா, சிங்கப்பூர், மாலைதீவு எம்மை விஞ்சிவிட்டன.கடந்த 59 ஆண்டுகளாக சண்டை பிடித்துக் கொண்டிருந்த ஐ.தே,கஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொண்டுள்ளன. ஐ.தே.க சவப்பெட்டிக்கு எத்தனையோ ஆணிகள் அடிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். எனது சகோதரி சந்திரிகாவும் ஆணி அடித்ததாக கூறுகின்றனர் ஆனால் ஐ.தே.க சவப்பெட்டிக்கு இறுதியாக கருஜயசூரிய ஆணி அடித்துவிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றில் நடந்துகொள்ளும் விதம் கேவலமாக இருக்கின்றது. மொழி வார்த்தை பிரயோகமும் அதே நிலையில் தான் இருக்கின்றது. பௌத்த குருமார்கள் தாக்கப்படுகின்றனர். பார்வையாளர் கண்களை மூடிக்கொள்கின்றனர். அவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றவர்களையும் மக்கள் மன்றிற்கு தெரிவு செய்தனர்.வேறு இடம் இல்லை என்பதால் சம்பந்தன் போன்றவர்கள் மன்றில் ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் மற்றைய கட்சிகளுக்கு வேறு மேடைகள் இருக்கின்றன. இந்த உயரிய சபையை புனிதமாக பேணவேண்டும் என்று எனது தாயார் கூறினார் . சபை செயற்பாடுகளை பாராட்டக்கூடிய வகையில் ஐ.தே.க , ஸ்ரீல.சு.க நடந்து கொண்டது . மக்கள் பிரதி நிதிகள் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதை ஒளிபரப்பு செய்ய வேண்டும். சுருக்கமாக ஒளிபரப்பு செய்வதற்கு ஒரு அலைவரிசையை ஏற்படுத்துவதற்கு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜேர்மன், இந்திய லோக் சபாவில் எவ்வாறு சபை அமர்வுகள் நடைபெறுகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் உல்லாச துறை பாதுகாக்கப்படவில்லை என்று அவுஸ்திரேலியா கூறுகின்றது. இதனால் 40 வீதமான உல்லாச பயணிகள் இலங்கைக்கு வரமாட்டார்கள். நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நுரைச்சோலை திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்வைத்தபோது தேரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களை திரட்டி இடையூறு விளைவித்தனர்.இவ்வாறான எதிர்ப்புகளை 1956 ஆம் ஆண்டு எனது தந்தையும் எதிர்நோக்கினார். இத்திட்டம் வெற்றியளித்தால் ஜே.வி.பி தோழர்கள் அவ்விடத்தை தொட்டுச் செல்வார்கள்.