பா.ம.க வினால் 26ம் திகதி மகிந்தவின் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 26ம் திகதி பா.ம.க வினால் மகிந்தவின் வருகையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடாத்தப்படும் என பா.ம.க தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தால் அப்பாவித் தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் கொடூரமான, ஈவு இரக்கமற்ற தாக்குதல்கள் உலகில் வாழும் தமிழர்களுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் அதிர்ச்சியையும் சொல்ல முடியாத துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு பள்ளிகளிலும் கோவில்களிலும் தேவாலயங்களிலும் மருத்துவமனைகளிலும் தஞ்சம் புகுந்துள்ள பெண்களையும் குழந்தைகளையும் குறிவைத்து தாக்கி அழித்து வருவது தமிழர்களை ஆழ்ந்த வேதனைக்கு ஆளாக்கி உள்ளது. எனவே சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வரும் 26 ஆம் திகதி காலை 11 மணிக்கு தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் எதிரே பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது





