குடாநாட்டை துண்டித்து இந்தியாவிடம் ஒப்படைக்க முயற்சிக்கின்றது அரசு நாடாளுமன்றத்தில் ஐ.தே.கட்சி எம்.பி. குற்றச்சாட்டு [uthayan.com] வடக்கை தனியாகப் பிரித்து இந்தியா விடம் ஒப்படைக்க அரசு முயற்சிக்கின்றது என ஐ.தே.கட்சி எம்.பி லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.நாடாளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் நான்காவது நாள் விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: ஏ 9 வீதியை மூடியதன் மூலம் யாழ். குடாநாட்டை தெற்கிற்கு தொடர்பில்லாத தனி மாவட்டமாக மாற்றிவிட்டீர்கள். அன்று ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலம் ஏ 9 வீதியை திறக்க முயற்சித்தீர்கள். இதற் காக ஐயாயிரம் இராணுவ வீரர்களைப் பலி கொடுத்தீர்கள் இன்று ஏ 9 வீதியை மூடி வைத்திருக்கின்றீர்கள். ஏன் இந்த இரட்டைவேடம். ஒவ்வொரு காலத்துக்கு ஒவ்வொரு கொள்கையை கடைப்பிடிப்பதால் தான் நாட் டில் குழப்பம் ஏற்படுகின்றது.விலைவாசி அதிகரித்தால் பரவாயில்லை. நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம் என்று மக்கள் தன்னிடம் தெரிவித்ததாக வரவு செலவுத் திட்டத்தை இச்சபையில் சமர்ப்பித்துப் பேசிய ஜனாதிபதி தெரிவித்தார். இன்று நாட்டில் பாதுகாப்பு இருக்கின்றதா? பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் நடக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என அச்சத்துடன் மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர்.இனப்பிரச்சி னைக்கு நியாயமான தீர்வை இந்த நாடாளு மன்றத்துக்கு முன் வைத்தால் ஐ.தே.கட்சி அதை ஆத ரிக்கும். இந்த நாட்டிலுள்ள பிரச்சினை களை அரசு வேடிக்கை யாக நினைக்கின்றது.ரவிராஜ் கொலைக்கு அரசே காரணம் என நேற்று இச் சபையில் பேசிய மகேஸ்வரன் குற்றஞ் சாட்டியுள்ளார். ரவிராஜ் கொலை குறித்து விசாரணை நடத்த ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸாரை அழைப்பதாக ஜனாதி பதி தெரிவித்தார். எங்கே ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார்? அமைச்சர் மங்கள சமரவீர:ஸ்கொட்லண்ட் யார்ட் குழு இன்னும் ஒரு சில தினங்களில் இலங்கை வருகின்றது. லக்ஷ்மன் கிரியெல்ல:ரவிராஜ் கொலை செய்யப்பட்டு எவ்வளவு நாளாகின்றது? கொலைக்கான தடயங்களை மறைத்துவிட்டு ஸ்கொட்லண்ட் யார்ட் பொலி ஸாரை வரவழைத்து என்ன பயன்?





