Wednesday, November 22, 2006

ரவிராஜின் படுகொலையை விசாரிக்க இன்னும்

ரவிராஜின் படுகொலையை விசாரிக்க இன்னும் ஓரிரு நாளில் ஸ்கொட்லன்ட்யாட் வருகை. படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான விசாரனைகளை மேற்கொள்வதற்கு ஸ்கொட்லன்ட்யாட் காவற்துறையினர் இன்னும் சில தினங்களில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் ஆற்றிய உரைக்கு பதில் அளித்த அமைச்சர் மங்களசமரவீர ஸ்கொடலன்யாட் அதிகாரிகள் இருவர் அடங்கிய குழுவினர் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்ட பின்னர் விசாரனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.