கிளிநொச்சியில் விமானப்படை வான் தாக்குதல்- விடுதலைப்புலிகளின் இராணுவபேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா விமானப்படையினர் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுபகுதியான கிளிநொச்சியில் வான் நடத்துவதாக விடுதலைப்புலிகளின் இராணுவபேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை 20 குண்டுகள் வரை போடப்பட்டுள்ளன தொடர்ந்து வான்தாக்குதல் கிளிநொச்சி பகுதியில் தொடர்வதால் கட்டிடங்கள் அதிர்கின்றன எனினும் இதுவரை எதுவரை எதுவித உயிர் சேதம் பற்றிய தகவலும் கிடைக்கவில்லை என ரொய்டரிற்கு இராசையா இளந்திரையன் செய்தி தெரிவித்துள்ளார்.
இராணுவதரப்பு இவ் வான் தாக்குதல் தொடர்பில் தமக்க் எதுவித தகவலும் உடனடியாக கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிடுள்ளது.
Tuesday, November 21, 2006
கிளிநொச்சியில் விமானப்படை வான் தாக்குதல்
Tuesday, November 21, 2006





