Tuesday, November 21, 2006

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள்.

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள். யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்தில் இன்று மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சிகரமாக இடம் பெற்றன காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் பல் கலைக்கழக மாவீரர் நினைவுத் தூபியில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பல நூற்றுக் கணக்கான மாணவர்கள் பேராசிரியர்கள் பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் மாணவாகள் கலந்து கொண்டார்கள் முதலில் பொதுச் சுடர் ஈகைச்சுடர்டகளை பல் கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்றி வைத்தார்கள் நினைவரைகளை பல் கலைக்கழக பீடாதிபதிகள் மாணவப் பிரதிநிதிகள் உரையாற்றினார்கள் குறிப்பிட்ட நினைவுத் தூபி கடந்த இரண்டு மாததத்திற்கு மன்னர் அத்து மீறி நுழைந்த இராணுவத்தினரால் சேதப்படுத்தப்பட்ட போதிலும் அதனை திருத்தி இன்று நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.