Tuesday, November 21, 2006

அரசுக்கு உண்மையான அக்கறை இருப்பின் கண்காணிப்பு....

அரசுக்கு உண்மையான அக்கறை இருப்பின் கண்காணிப்பு மற்றும் செஞ்சிலுவைக் குழுக்களை பாதையைத் திறப்பதில் ஈடுபடுத்த வேண்டும் தமிழ்ச்செல்வன் குடாநாட்டுக்கு மக்களின் அவல நிலை யைத் தீர்ப்பதற்கு அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமாயின் மூடப்பட்டுள்ள நுழைவாசல்களைத் திறப்பதில் யுத்தநிறுத் தக் கண்காணிப்புக் குழு, செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு ஆகியவற்றை ஈடுபடுத்து வதாக அறிவித்திருக்கவேண்டும். இப்படி விடுதலைப் புலிகளின் அரசி யல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் தெரிவித்தார். ஏ9 பாதை திறப்பது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பாக இணையத்தளம் ஒன்றுக்குத் தகவல் தெரிவிக்கையில் அவர் இப்படித் தெரி வித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஏ9 பாதையை மீளத் திறப்பது குறித்து அரசு விடுதலைப் புலிகளுக்கு உத்தியோக பூர்வமாக தனது நிலைப்பாட்டை அறி விக்கவில்லை. ஆதலால் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை அடிப்படையாக வைத்து எமது நிலைப்பாட்டை வெளிப் படுத்த முடியாது. மக்களின் அவல நிலையைத் தீர்ப்ப தற்கு அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமாயின், மூடப்பட்டுள்ள நுழை வாசல்களை மீளத் திறப்பதில் கண்காணிப் புக் குழுவையும் செஞ்சிலுவைச் சர்வ தேசக் குழுவையும் அதில் ஈடுபடுத்துவதாக அறிவித்திருக்கவேண்டும். இந்த நுழைவாசல்கள் மூடப்படுவ தற்கு முன்னர், யுத்தநிறுத்த உடன்படிக்கை யில் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் அவ்வாறே செய்யப்பட்டு வந்தது. ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக் கைகள் இடம்பெறும் பகுதிகளில் உள்ள நுழைவாயில்களில் கண்காணிப்புக் குழு நிறுத்தப்படவேண்டும் என்றும் அவ்வாறு செய்வதன்மூலமே வலிந்த தாக்குதல் களை நடத்துவது எந்தத் தரப்பு என் பதை அறிய முடியுமென்றும் பல தடவைகள் வற்புறுத்தி வந்துள்ளோம். அரசாங்கம், தான் வெளியிடும் அறி விப்புக்களில் நேர்மையுடையதாக இருந் திருப்பின் மனிதாபிமான பிரச்சினை களைத் தீர்க்கும் முயற்சிகளில் கண்காணிப் புக் குழுவையும் செஞ்சிலுவை சர்வ தேசக் குழுவையும் ஈடுபடுத்தியிருக்கும்; ஈடுபடுத்தியிருக்கவேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக பூநகரிக்கும் முகமா லைக் கும் கிபிர் விமானத் தாக்குதல்களை இன்று (திங்கட்கிழமை) அனுப்பியுள்ளது. யாழ்.குடாநாட்டிலும் கிழக்கில் வாக ரையிலும் பொங்கியெழுந்துள்ள மனி தாபிமானப் பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயத்தில் அரசு அற்பத்தனமாகவே நடந்துகொள்கிறது. இராணுவ அட்டவணை ஒன்றை மனதில் இருத்திக்கொண்டு பாதிக்கப் பட்ட மக்களுக்கு மனிதாபிமான ரீதியான விநியோகங்களைச் செய்வதற்கு நடவ டிக்கை எடுத்து வருவதாக ஊடகங்களுக் குக் காட்சிப்படுத்துவதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகின்றது. இரண்டு பிரதேசங்களிலும் மூடப்பட்டுள்ள நுழைவாயில்களில் கண்காணிப்புக்குழுவை பணியில் அமர்த்த ஆக்க பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப் படவில்லை. வாஷிங்ரனில் ஆரம்பமாகியுள்ள இணைத் தலைமை நாடுகளின் மாநாட்டை முன்னிட்டு கடந்த 2 வாரங்களாக பட்டி னியால் வாடும் 38 ஆயிரம் மக்கள் உள்ள வாகரைக்கு ஒரு லொறியில் மட்டுமே உணவுப் பொருள்களை அரசு அனுப்பியுள்ளது. அதேபோன்று இராணுவ முற்றுகைக் குள் உள்ள 6 லட்சம் மக்கள் வாழும் யாழ்ப்பாணத்துக்கு ஒரே வாகன அணி யில் பொருள்களை எடுத்துச்செல்லப் போவதாக ஊடகத்துக்கு பகட்டுக்காட்டி யிருக்கிறது. அரசாங்கம் இப்படி அவர் கூறினார். [uthayan.com]