உணவுக்குச் சென்றவர்க்கு மருந்து கொடுத்த இராணுவம். யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நிலை கொண்டுள்ள 513 வது படைப்பிரிவைச் சேர்ந்த இரணுவத்தினர் நாளாந்தம் வழங்கி வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கச் சென்ற பொது மக்களுக்கு இராணுவத்தினர் நோய்க்கான மருந்து கொடுத்துள்ளார்கள் சுன்னாகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை காலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெறவென பல நூற்றுக்கணக்கான மக்கள் ஊரடங்குச் சட்டம் நீக்க முன்னரே காவல் இருந்துள்ளார்கள். நேற்று முன் தினம் பகல் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இராணுவத்தினர் ஒரு மருத்துவ முகாமை நடத்தினார்கள் குறிப்பிட்ட மருத்துவ முகாமுக்கு மக்கள் செல்லாது விட்டமையால் வழமை போன்று வீடியோ மற்றும் கமராக்குளுடன் தென் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டவர்களும் காவல் நின்று புகைப்படங்கள் எடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட இருந்தன பொது மக்கள் யாரும் குறிப்பிட்ட மருத்துவ முகாமுக்கு செல்லாமையால் இராணுவத்தினர் தமது பேருந்தைக் கொண்டு வந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பெற குழந்தைகளுடன் நின்ற பெண்கள் மற்றும் முதியவர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்று மருத்து முகாமில் பெரும் தொகையான மக்கள் சிகிச்சை பெறுவது போன்று காட்சியை எடுத்துக் கொண்டு மக்களை மீண்டும் கொண்டு வந்து இறக்கி விட்டுச் சென்றுள்ளார்கள்.





