Tuesday, November 21, 2006

கோண்டாவிலில் படையினரால் சுட்டு ஒருவர் கொலை.

கோண்டாவிலில் படையினரால் சுட்டு ஒருவர் கொலை. நேற்று மாலை 6.30 மணியளவில் வெள்ளை வானில் கொண்டுவந்து வீட்டின்முன்னர் இறக்கிவிட்ட குடும்பஸ்தர் வீட்டினுள் செல்லு முன்னர் ஊந்துருளியில் வந்து காத்திருந்தவர்களினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் ஊரடங்குச் சட்டம் அமூலில் இருந்த வேளையில் குறிப்பிட்ட நபர் இராணுவப் புலனாய்வாளார்களினால் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டதாகவும் அவர் வீட்டிள் இருந்த மனைவியை கூப்பிட்டுக் கொண்டு சென்ற வேளையில் குறிப்பிட்ட வீட்டிற்கு அருகாமையில் உந்துருளியில் வந்து நின்ற இராணுவப் புலனாய்வாளர்களினால் சுட்டு படு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்ட நபர் ஆயுதங்களுடன் வானில் வந்தவர்களினால் இரவு 9.00 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டு இருந்ததார் கணவனைத் தேடிச் சென்ற மனைவியிடம் ஊரெழு இராணுவ முகாமில் வைத்து படைத்தரப்பினர் நன்பகல் 2.00 மணியளவில் குறிப்பிட்ட நபரை தாம் விடுதலை செய்து விட்டதாகக் கூறி கையொப்பம் வாங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது