Tuesday, November 21, 2006

யாழ்ப்பாணத்தின் நிலைகுறித்து சர்வதேச நாடுகளின்---

யாழ்ப்பாணத்தின் நிலைகுறித்து சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் இன்று ஆராய்வர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலை குறித்து ஆராய்வதற்காக வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். இன்றும் நாளையும் அங்கு தங்கியிருந்து இவர்கள் யாழ்ப்பாணக்குடாநாட்டின் உண்மை நிலையினை நேரில் அறியவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறி லங்காவுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் கிரேக் பிரெஞ்ச், சுவிட்ஸர்லாந்து தூதுவர் ருத் பிளிண்ட், பிரித்தானியாவின் பிரதித் தூதுவர் லெஸ்லி கிரெய்க் ஆகியோரும் ஐரோப்பிய ஆணைய மனிதாபிமான உதவி அமைப்பு, சுவிஸ் அபிவிருத்திக்கான அமைப்பு என்பவற்றின் பிரதிநிதிகளுமே யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு நேரில் விஜயம் செய்யவுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாண ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், அரசாங்க அதிபர் கே.கணேஷ் உட்பட பலரையும் சந்தித்து பேசவுள்ளனர்.