Tuesday, November 21, 2006

மாவீரர் வாரத்தை எழுச்சியுடன் அனுஷ்டிக்க ஏற்பாடுகள்

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மாவீரர் வாரத்தை எழுச்சியுடன் அனுஷ்டிக்க ஏற்பாடுகள் மாவீரர் வாரம் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது. ஒரு வார காலம் அனுஷ்டிக்கப்படும் இந்த நிகழ்வின் இறுதி நாள் எதிர்வரும் திங்கட்கிழமையாகும். வடகிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மாவீரர் தின நிகழ்வை மிகவும் எழுச்சியாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேநேரம், அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மாவீரர் மயானங்களிலும் இறுதி நாளில் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இதற்காக முழு அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அலங்கார வளைவுகள், பந்தல்கள், நினைவுத் தூபிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இறுதி நாள் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உரை இடம்பெறும். இம்முறை இந்த உரை குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.