Wednesday, November 01, 2006

மட்டக்களப்பில் படையினரின் முன்னேற்ற முயற்சி.....

மட்டக்களப்பில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு ஒரு படையினன் பலி. மட்டக்களப்பு மண்டூர் கம்பிக்கட்டு பாலத்தில் இருந்த விசேட அதிரடிப்படையினர் நேற்று செவ்வாக்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவ முற்பட்ட போது புலிகளினால் கடுமையான எதிர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு படையினரின் நகர்வுகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது. இதில் ஒரு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் படையினரின் பவள் வாகனம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படையினர் மேற்கொண்ட மோட்டார் தாக்குதலின் போது பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.