ஏ-9 திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க புலிகள் முடிவு: இளந்திரையன்
ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் திறக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வார ஏட்டுக்கு இளந்திரையன் தெரிவித்துள்ள கருத்து: நீண்டகாலமாக ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பட்டினிச் சாவை நோக்கி உள்ளனர். ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும்.
எதிர்வரும் வாரங்களில் அரசாங்கம் இதுவிடயத்தில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கவும் நாம் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினோம்.
ஒரே ஒரு வாகனத் தொடரணிக்காக நாங்கள் ஏ-9 பாதையை திறக்க முடியாது. எந்த விலை கொடுத்தாலும் நாங்கள் திறக்கமாட்டோம். ஐ.நாவே கேட்டுக்கொண்டாலும் திறக்க முடியாது. யாழ்ப்பாண குடாநாட்டுக்கு தொடர்ச்சியாக உணவுப் பொருட்கள் விநியோகம் சென்றடைய வேண்டும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் இளந்திரையன்.
"ஏ-9 பாதையை திறந்து உணவுப் பொருட்கள் வாகனத் தொடரணியை அனுப்புவது குறித்து சிறிலங்கா சமாதான செயலகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம்" என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் தெரிவித்தார்
Sunday, November 26, 2006
ஏ-9 திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க புலிகள் முடிவு:
Sunday, November 26, 2006





