மாவீரர்களின் கனவு விரைவில் நனவாகும் - கேணல் தீபன் தமிழர் தாயகம் விரைவில் ஆக்கிரமிப்புக்களில் இருந்து மீட்டெடுக்கப்படும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் வட போர் முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்தார். நேற்று (24.11.2006) கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வென்றெடுப்பதற்கு அகிம்;சை வழி உரிய வழியல்ல ஆயுத வழிமூலம்தான் வென்றெடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டை உணர்ந்த எமது தேசியத் தலைவர் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஆயுதத்தால் நசிக்கப்பட்ட தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தை ஆயுதத்தாலேயே வெல்லப்படவேண்டுமென்ற நம்பிக்கையோடு விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார். ஆயுதப் போராட்டத்தை வென்றெடுப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் ஒருரிரு இளைஞர்களை இணைத்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்ததார்.இன்று எமது விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்பட்டு வளர்ந்து இருக்கிறது. இவ்வளர்ச்சிக்கு காரணம் மாவீரர்கள் பலபோர்களிலேயே எமது உயர்களை துச்சமென மதித்து வீரசாதனை புரிந்து வித்தாகி இருக்கிறார்கள்.மாவீரர்களின் உயிர் தியாகத்தால் இன்றைய பலமான சூழ்நிலை உருவாக்கப்பட்டது. விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு பலவடிவங்களில் மாவீரர்கள் தங்களை அர்பணித்துள்ளார்கள்.விடுதலையமைப்பின் இரகசியங்களை காப்பாற்றி நஞ்சருந்தி வித்தாகியவர்கள் பலர் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக குண்டை வெடிக்கவைத்து விழ்ந்தவர்கள் பல இவ்வாறான மாவீரர்களின் தியாகத்தால் எமது விடுதலையமைப்பு வளர்ந்து இருக்கிறது. எமது விடுதலையமைப்பின் அடுத்த கட்டப்பாய்ச்சலுக்கு பலமாக இருக்கப்போகின்றவர்கள் மாவீரர்கள். எமது விடுதலைப் போராட்டம் அடுத்தகட்ட நகர்வுக்கு தயாராகி வருகிறது. இறுதிவெற்றியை நாம் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம் அவ்வெற்றிக்காக மாவீரர்களின் இலட்சியக் கனவுகளை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் உள்ளது.தற்போது ஜந்துவருட கால இடைவெளிக்கு பின்னர் போர் ஒன்று இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது. சிறிலங்கா அரசாங்கம் எங்கள் மீது போரை தினித்துக்கொண்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மாலாற்றில் வலிந்து தாக்குதலை ஆரம்பித்து அக்களமுனை சகல இடங்களுக்கும் பரவியுள்ளது. ஏதிரியின் வான்படை எமது மக்களை பெருமளவில் படுகொலை செய்துவருகிறது. எங்களுடைய விடுதலையை பெறவேண்டுமானால் நாம் அர்ப்பணிப்புக்ளை உயிர் தியாகங்களையும் செய்தாகவேண்டும் அவலங்களை சுமக்கவேண்டும் நெருக்கடிகளை நாம் சந்தித்தாக வேண்டும் இதுதான் யாதார்த்தம். எந்த சவால்களுக்கும் முகம்கொடுக்ககூடிய வகையில் எங்களை நாம் தயார்படுத்த வேண்டும் மாவீரர்களின் கனவுகளுடன் எங்களுடைய இலட்சியங்களை விரைவில் அடைவோம் எனவும் தெரிவித்தார். முற்பகல் 10.00 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மைச் சுடரினை தமிழீழ நிதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா ஏற்றிவைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை கேணல் தீபன் ஏற்றிவைத்தார்.அக்கராயன் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று விடுதலைப் போரில் ஆகுதியாகிய மாவீரர்களின் நினைவாலயத்தினை கேணல் தீபன் திரைநீக்கம் செய்தார். ஆரங்க நிகழ்வுகள் அக்கராயன் பிரதேசப் பொறுப்பாளர் மாறன் தலைமையில் இடம்பெற்றது. மாவீரர்களின் பொது உருவப்படத்துக்கு பயிற்சி ஆசிரியர் வீரப்பன் சுடரெத்தி மலர்மாலை அணிவித்தார். மதிப்பளிப்பு உரைகளை அக்கராயன் மகாவித்தியாலய முதல்வர் ஜ.குகானந்தராஜா, விடுதலைப் புலிகளின் பத்திரிகை ஆசிரியர் ரவி ஆகியோர் நிகழ்த்தினர்.





