Friday, November 24, 2006

ஏ-9 வீதியூடாக உணவுப் பொருட்களை அனுப்ப உடன்...

ஏ-9 வீதியூடாக உணவுப் பொருட்களை அனுப்ப உடன் நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு யாழ்.குடாநாட்டிற்கு ஏ-9 வீதியூடாக உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு உடன் நடவடிக்கையெடுக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ உத்தரவிட்டுள்ளார். ஏ-9 வீதியூடாக யாழ். குடாநாட்டிற்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வது தொடர்பாக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது தொடர்பாக அரச தரப்பினரோ, விடுதலைப்புலிகளோ தமக்கு அறிவிக்க வில்லையென்று தெரிவித்துள்ள போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் இது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். உணவுப் பொருட்களை யாழ்.குடாநாட்டிற்கு அனுப்ப தயாராகவுள்ள அனைவரும் உடனடியாக அத்தியாவசிய சேவையாளர் ஆணையாளர் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.