Monday, October 23, 2006

வடகிழக்கு இணைப்பு சட்டரீதியற்றது என்பது..........

வடகிழக்கு இணைப்பு சட்டரீதியற்றது என்பது அபாயகரமான சூழலை ஏற்படுத்தும் - ஜெயானந்தமூர்த்தி கடந்த 207 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் வடகிழக்கு இணைந்துள்ளது என்பதற்கு வலுவான சான்றிதழ்கள் இருக்கும் நிலையில் இலங்கையின் உச்ச நீதி மன்றத்தினால் இந்த இணைப்பு வலுவற்றது என தீர்ப்பளித்திருப்பது தமிழ் மக்கள் மத்தில் வேதனையினை ஏற்படுத்தும் விடயம். என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார். 1799ம் ஆண்டு பிரித்தானிய ஆளுநரான “கிளைக்கோன” அவர்கள் வடகிழக்கு இணைத்து தமிழ் மக்களினால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. என்பதனை அவரினால் வெளியிடப்பட்ட கூற்று ஒன்றில் தெளிவாகவும் விரிவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 1815ம் ஆண்டு கண்டி இராச்சியம் ஆங்கிலயரின் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட போது இலங்கை 16 நிர்வாக அலகாக பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. எனினும் 1833ல் கோல்பூறூக்கு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்ட போது 16 அலகிலும் அரச செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐந்தாக அலகுகளாக பிரிக்கப்பட்டது. இதில் கூட யாழ்ப்பாணத்தினை மையமாக கொண்டு அநுராதபுரத்தினை உள்ளடக்கிய வடக்கு மாகாணம். திருமலையை மையமாக கொண்டு பொலநறுவை பதுளையின் ஒரு பகுதியினை உள்ளடக்கி கிழக்கு மாகாணத்தினையும் ஒன்றாக இணைந்த அலகுகளாக பிரித்து ஆட்சி செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேரின் காலத்தில் இருந்து தமிழர் தாயகத்தின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக ஒன்றினைக்கப்பட்ட ஒரு நிர்வாகமாக அலகாக இருக்கின்ற போது இதனை விரும்பாத பேரினவாத சக்தியான ஜே.வி.பி. வடகிழக்கை பிரிந்து தனித் தனி மாகாணமாக செயற்பட வேண்டும். என்பது நீண்ட காலமாக தீட்டிய சதியில் உச்சகட்டம் தான் வடகிழக்கு இணைப்பு வலுவற்றது.