திருமலையில் படையினரின் உலங்குவானுர்தி பறக்க முடியாது செயலிழந்தது. திருமலையில் மாவிலாற்றிக்கும் கந்தாளக்கும் இடையில் சிறீலங்கா வான்படை உலங்குவானுர்தி ஒன்று பறப்பில் ஈடுபடமுடியாமல் செயலிழந்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை படைமுகாமில் இருந்து மேல் எழுந்த உலங்கு வானுர்தி சிறிது தூரம் பறந்ததும் தனது பறப்பை தொடர முடியாது செயலிழந்த நிலையில் அவசரஅவசரமாக தரையிறக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தரையிறக்கப்பட்ட வானுர்தியை இயக்க முடியாது போகவே படையினர் தமது கனரகவாகனங்களில் உலங்கு வானுர்தியை கட்டி இழுந்து சென்றதை தாம் கண்டதாக சிங்கள மக்கள் சிலர் தென் இலங்கை ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை மறுத்திருக்கும் சிறீலங்கா அரசு நேற்றை தினம் தமது விமானபடையை சேர்ந்த வானுர்திகள் எவையும் பளுதடையவில்லை என தெரிவித்துள்ளனர்.





