Saturday, October 21, 2006

போருக்கும் தாயார் சமாதானத்திற்கும் தயார்

போருக்கும் தாயார் சமாதானத்திற்கும் தயார் - படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் விடுதலைப் புலிகள் போருக்கும் தயார் சமாதானத்திற்கும் தாயார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று ஏ.எவ்.பி செய்தி நிறுவனத்திற்கு கருத்துரைத்திருக்கும் இளந்திரையன்: சிறீலங்கா அரசு போருக்கான முனைப்புக்களில் ஈடுபட்டால் அதனை எதிர்கொள்ள தமிழீழப் படைகள் தயாராக உள்ளதாகவும் சிறீலங்கா அரசாங்கம் வலிந்த தாக்குதலை முன்னெடுத்தால் அது இலங்கைத் தீவில் அனைத்து பகுதிகளிலும் உணரப்படும் எனவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார். மாறாக சிறீலங்கா அரசாங்கம் சமாதானத்தை விரும்பினால் தமிழ் மக்களும் பூரணமாக அனுபவிக்கும் வகையில் சமாதானம் அமைய வேண்டும் எனவும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் நடைபெற்ற மோதலில் விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் பொய்யான பரப்புரைகளில் ஈடுபடுகின்றது எனவும் இதில் எந்தவித உண்மையும் இல்லை எனத் தெரிவித்த இளந்திரையன் இரு தரப்பினருக்கும் எந்தவித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை என்பதையும் இளந்திரையன் சுட்டிக்காட்டியுள்ளார்.