Saturday, October 21, 2006

தேசியத் தலைவரால் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட கால...

தேசியத் தலைவரால் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுற்றது - தமிழ்ச்செல்வன் கடந்த மாவீரர் நாளன்று, தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட கால அவகாசம், பல மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்திருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். நேற்று தமிழீழ தேசிய தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கிய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், மகிந்த ராஜபக்சவிற்கு தமிழீழ தேசியத் தலைவரால் வழங்கப்பட்ட கால அவகாசம், இவ்வருட மாவீரர் நாளுடன் நிறைவடையும் எனக் கூறப்படுவது மிகவும் தவறானது எனக் குறிப்பிட்டுள்ளார். மாறாக சிறீலங்கா அதிபருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம், கடந்த பல மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்து, தற்போது யுத்த சூழல் நிலவுவதாகவும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழ் மக்களும் மிகவும் பலவீனமாக இருப்பதாகக் கருதி, தமிழீழ தாயகம் மீது யுத்தத்தை தொடுத்த சிறீலங்கா அரசாங்கம், தற்போது அதன் விளைவுகளை அனுபவித்து வருவதாகவும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புக்களின் விளைவுகள், ஈழத் தீவு முழுவதும் பரவுவதை தவிர்க்க முடியாது என எச்சரித்திருக்கும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர், அதன் ஆரம்ப கட்டத்தையே தற்போது சிறீலங்கா அரசாங்கம் உணரத் தொடங்கியிருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். இதுகுறித்த செவ்வியினை பதிவு இணையத்தளத்தின் சிறப்புப் பார்வையில் முழமையாக ஒளியில் பார்க்கலாம்.