அரசுடன் இணைந்துகொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி கோரும் 40 வீத அரச அதிகாரத்தை வழங்குவதற்கு இடமளிக்க முடியாதென ஸ்ரீல. சு. கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருவதுடன் இது குறித்து ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டவும் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி அரசுடன் இணைவதற்காக பத்து அமைச்சுப் பதவிகளை வழங்குவதால் எவ்வித பிரச்சினைகளுமில்லை. ஆனால் பிரதமர் பதவியையும் 40 வீதம் அரசின் அதிகாரத்தையும் கோருவது சாதாரணமாகாது என்றும் அமைச்சர்கள் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஐ. தே. க. கோரும் இவ்வாறான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படுமானால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருட்டு தியாகங்களுடன் செயற்பட்ட உறுப்பினர்கள் அவர்களது ஆதரவாளர்களுக்கிடையே பிரச்சினைகள் உருவாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் கூடியபோதே தங்களின் இக்கருத்தை ஜனாதிபதியிடம் முன்வைப்பதென தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகின்றது
Sunday, October 22, 2006
அரசுடன் இணைந்துகொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி...
Sunday, October 22, 2006





