சுவிற்சாலந்தில் புலிகளிற்கும்,சிறீலங்கா அரசிற்குமான பேச்சுக்கள் காலை 10மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. பேச்சுக்களை சுவிஸ் அரசின் பிரதி நிதி ஆரம்பித்து வைக்க இரு தரப்பு பேச்சு வார்த்தை குழுக்களையும் நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்கைம் அறிமுகப்படுத்தி பேச்சு மேசையில் அமரச்செய்தார் இதனை அடுத்து பேச்சுக்கள் ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நான்கு தரப்பினர் இப்பேச்சுக்களில் கலந்து கொண்டு இருக்கின்றனர் விடுதலைப்புலிகள்,சிறீலங்கா ,நோர்வே ,யுத்த நிறுத்த கண்காணிப்பாளர் என 4 தரப்பினர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
விடுதலைப்புலிகளின் தரப்பில் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையில் காவல்துறைப்பொறுப்பாளர் நடேசன்,இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்,மகளிர் அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் தமிழ்விழி ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர் மிகவும் இறுக்கமான நிலையில் பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.
Saturday, October 28, 2006
தமிழ்செல்வன் தலைமையில் சுவிஸ் பேச்சுக்கள் தொடங்கின
Saturday, October 28, 2006





