வடபோர் முனையில் படையினர் புலிகளின் பகுதிகளை நோக்கி எறிகணைத் தாக்குதல். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி இன்று சிறீலங்கா படையினர் கண்முடித்தனமான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வடபோர்முனையின் நாகர்கோவில்,வரணி படைமுகாம்களில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி இன்று காலை தொடக்கம் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் இத்தாவில் பகுதிகளை நோக்கி நடத்தப்பட்டுள்ளன. இதனிடையே ஆள் இல்லாத வேவு விமானம் ஒன்று இப்பகுதிகளை நோட்டமிட்டதாகவும் மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.





