காலிதுறை முகத்தாக்குதல் சம்பந்தமான விபரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. கடந்த புதன்கிழமை நடைபெற்ற காலிதுறை முகத்தாக்குதலில் மேலும் இரண்டு எண்னை தாங்கிகளும் கடற்படையின் கட்டிட தொகுதி ஒன்றும் சேதமடைந்துள்ளதாகசெய்திகள் தென்இலங்கை ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இத் தாக்குதலில் எரிவாயுக்கப்பல் ஒன்றும் 2 டோறா உட்பட மேலும் இரண்டு கடற்கலங்கள் அழிக்கப்பட்ட செய்தி தாக்குதல் நடைபெற்ற அன்று வெளிவந்த நிலையில் மேலதிக அழிவுச் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டு இருக்கின்றன. தென் இலங்கையை தொடும் அளவிற்கு தமிழீழ கடற்படையின் வலிமை அதிகாரித்திருப்பதை காலி துறைமுகத்தாக்குதல் உணர்த்துவதாக இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் சுட்டிக்காட்டியுள்ளர்.





