உயர்மட்ட பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் -அமைச்சர் ரம்புக்வெல கூறுகிறார்
இறைமை, சுயாதிபத்தியம் கொண்ட நாடென்ற ரீதியில் ஜனநாயக மரபுகளை மதிக்கும் நாம் இதுவரையிலும் வெளிநாடுகளில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அதி உச்சப்பாதுகாப்பை வழங்கியுள்ளளோம் அதனை எதிர்வரும் ஜெனீவா பேச்சுக்களின் போதும் வழங்குவோமெனத் தெரிவிக்கும் அமைச்சரும் பாதுகாப்புத் துறைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல சர்வதேச பாதுகாப்புத் தேவையென்றகோரிக்கை இதுவரை அரசிடம் விடுக்கப்படவில்லையென்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
சர்வதேச மட்டத்திலான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென புலிகள் நோர்வே தரப்பினரிடமும் ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசியிடம் தெரிவித்துள்ள போதும் அது தொடர்பில் இதுவரையில் அரசாங்கத்திற்கு உத்தியோபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு அறிவித்தாலும் அதனை சமாதான செயலகமும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான பிரிவினருமே ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
கடந்த பேச்சுவார்த்தைகளின் போது ஜனநாயகத்தை மதிக்கும் அரசாங்கமென்ற ரீதியில் முழுமையான பாதுகாப்பை புலிகளுக்கு வழங்கினோம். அதில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை புலிகள் புரிந்து கொள்ள வேண்டும். நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கே புலிகள் இணக்கம் தெரிவித்தனர். எனவே, இப்போது நிபந்தனையேதும் விதிப்பார்களானால் அது நியாயமற்ற செயலாகும்.
பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான இணக்கத்தை புலிகள் சர்வதேச அனுசரணையாளர்கள் ஊடாக எழுத்து மூலம் வழங்கியபோது நிபந்தனையற்ற பேச்சுகளுக்கே இணக்கினார். அதற்கமையவே திகதி நிர்ணயிக்கப்பட்டு ஜெனீவாவில் பேச்சு நடத்த ஏற்டுகள் செய்யப்பட்டன என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புவெலப தெரிவித்தார்.
Sunday, October 22, 2006
உயர்மட்ட பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் அமைச்சர்....
Sunday, October 22, 2006





