Sunday, October 22, 2006

மழைகாலத்தில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் அபாயம்

யாழ்.குடாநாட்டு மக்கள் மழைகாலத்தில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் அபாயம் யாழ்குடாநாட்டுக்கு கப்பல்மூலம் அனுப்பப்பட்டு அரச அதிகாரிகளினால் பங்கிடப்பட்டு வழங்கப்படும் உணவுப்பொருட்கள் குடாநாட்டு மக்களுக்கு ஒரு நாளைக்குக் கூட போதுமானதாக இல்லையென தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் பருவ கால மழை ஆரம்பமானால் கப்பல் மூலம் பொருட்களை கொண்டு செல்வதோ அவற்றை சிரமமான காரியமாகும். ஏற்கனவே மிக மோசடியான நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் குடாநாட்டு மக்கள் தொடர்ந்து வரும் மழைகாலத்தில் பட்டினிச் சாவை எதிர்கொள்ளப் போகின்றனர் என மனித உரிமைகள் அமைப்பு பிரதிநிதிகள் எச்சரிக்கின்றனர். அத்தியாவசியமாகும். கொழும்பிலிருந்து அனுப்பி வைக்காத நிலையில் கப்பல் மூலம் அனுப்பப்படும் குறைந்தளவிலான பொருட்களை பங்கிட்டு வழங்குவதில் செயலக அதிகாரிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதேவேளை இது பற்றிய தகவல்களை வெளியிடக்கூடாதென்று அரச உயர் மட்டத்தின் அழுத்தங்களிற்கும் அவர்கள் உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏ 9 வீதி மூடப்பட்டு இரண்டு மாதங்களை கடந்துவிட்ட நிலையில் இவ்வாரம் அத்தியாவசிய உப உணவுப் பொருட்கள் சில பொருட்கள் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களூடாக யாழ். செயலக அதிகாரிகளால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. குடும்பமொன்றிற்கு 50 கிராம் உள்ளி, 100 கிராம் சர்க்கரை, 100 கிராம் மல்லி, மற்றும் குளியல் சவர்க்காரமொன்று, பற்பசை ஒன்று என அப்பபட்டியலில் அடங்கியிருக்கின்றது. அத்துடன் குடும்பமொன்றிற்கு பால்மா பக்கற்றொன்றும் வழங்கப்பட்டுள்ள போதும் சமையலிற்கான மரக்கறி, எண்ணெய் 1/2 லீற்றரென மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சில குடும்பங்களிற்கே வழங்கப்படுகின்றது.