Saturday, October 21, 2006

மாத்தளையில் புலிகளுக்கு வாகனங்கள்...

மாத்தளையில் புலிகளுக்கு வாகனங்கள் விற்பனை செய்ததாகக் கூறி மூவர் கைது மாத்தளைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் மூன்று பேர் ஸ்ரீ லங்கா பொலிஸாரால் கைதுசெய்யப்பட் டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வாகனங்களை விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்று பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் திகதி வவுனியா பெரியகுளம் பகுதியில் படையினரின் முகாம் அருகே வெடித்த வாகனத்தைத் தாங்களே விற்பனை செய்தனர் என்பதை மூவரும் ஒப்புக்கொண்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட வர்களில் ஒருவர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் பிணையில் விடுவிக் கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.