Saturday, October 21, 2006

மட்டக்களப்பில் அடி காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு எறாவூர் காவல்துறைக்குட்பட்ட சித்தாண்டி 4ம் குறிச்சியில் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் அடி காயங்களுடன் ஆணின் சடலம் ஒன்று ஏறாவூர் காவல்துறையினர் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர் சாந்தசாமி சுரேஸ்குமார் வயது 17 மாவடிவேம்பு சித்தாண்டியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இனம் தெரியாதவர்களினால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.