Saturday, October 21, 2006

தமிழர் தாயகத்தை கூறுபோடுவதை எதிர்த்து வடக்குகிழக்கு...

தமிழர்களின் பூர்வீகத் தாயகமாகிய வடக்கு கிழக்கு மாகாணத்தை மீண்டும் முறைப்படி இணைக்குமாறு கோரி தமிழர் தாயகம் எங்கும் எதிர்வரும் 25ஆம் திகதி புதன்கிழமை பூரண கதவடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து தமிழர் தாயகத்தைக் கூறுபோட எடுக்கப்படவிருக்கும் முயற்சிகளுக்கு ஒருமித்த எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக அன்றைய தினம் பணிகள் அனைத்தையும் முழு அளவில் முடக்கி போராட்டத்தில் ஈடுபடுமாறு வடக்கு கிழக்கு மக்களிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக் கும் அறிவிப்பை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நேற்றுக்காலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடத்திய செய்தியா ளர் மாநாட்டில் வெளியிட்டது. மாநாட்டில் கலந்துகொண்ட மாவை சேனாதிராஜா எம்.பி. இதுபற்றி தெரிவித் ததாவது:ஒன்றுபட்ட நாட்டுக்குள் இனப்பிரச்சி னைக்கு தீர்வு காணப்படவேண்டுமானால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைத் திருக்க வேண்டும். கடந்த 18 வருடங்களாக வடக்கு கிழக்கு இணைத்து ஒரே மாகாண மாக, ஒரு ஆளுநரின் கீழ் இருந்து வந்துள்ளது. இதையே கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர்.ஒகஸ்ட் 11ஆம் திகதி ஏ9 வீதி மூடப் பட்டதன் பின்னர் யாழ். குடாநாட்டு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்ற னர். கிழக்கிலும் சில வீதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் உண்ண உணவின்றி மர நிழல்களில் தவிக்கின்றனர். இதற்காகவே நாங்கள் கடந்த இரு நாடாளுமன்ற அமர்வுகளின் போது அமைதியாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஒக்டோபர் 16ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டது செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகளைப் பாதிக்கும். வடக்கு கிழக்கு மாகா ணங்களை மீண்டும் இணைக்கும்படி கோரியே நாம் கடந்த 17, 18ஆம் திகதிகளில் சபையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சபை நிகழ்வுகளை முடக்கினோம். இந்த நிலை யில் அமைச்சர்கள் சிலர் எம்மிடம் உங்கள் கோரிக்கையை முன்வைத்தால் நாங்கள் மறுதினமே அரசின் நிலைப்பாடு குறித்து இச் சபையில் அறிவிப்போம் எனக் கூறிய தையடுத்தே கஜேந்திரகுமார் பொன்னம் பலம் எம்.பி. கடந்த வியாழக்கிழமை அறிக்கையொன்றை விடுத்தார். அரசு பதிலளிக்க போதிய கால அவகாசம் வழங்கியுள்ளோம். அடுத்த 7ஆம் திகதி வடக்கு கிழக்கு தொடர்பாக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க கால அவகாசம் வழங்கியுள்ளோம்.வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்க நடாளுமன்றத்தில் பிரே ரணை கொண்டு வந்தால் ஆதரிப்பதாக ஐ.தே.கட்சியும் தெரிவித்துள்ளது. நாமும் ஆதரிப்போம். அரசு இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் மாவை சேனாதிராஜா.மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு எம் .பி. எஸ்.கனகசபை இச் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போது கூறியதாவது:எதிர்வரும் 25 ஆம் திகதி வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த் தாலுக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்களும் ஆதரவு வழங்கவேண்டும்.எமது நிலையைப் புரிந்துகொண்டு கிழக்கில் வாழும் சிங்கள மக்களும் ஆதரவு வழங்குவார் களென நம்புகின்றேன்.என்று தெரிவித்தார்.