Saturday, October 21, 2006

சாவகச்சேரி ஆட்டோச் சாரதி பலத்த காயத்துடன் மீட்பு.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சாவகச்சேரிப் பகுதியில் வைத்து வாடகைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ சாரதி யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆணைக் குழுவினர் எடுத்த முயற்சி காரணமாக பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த புதன் கிழமை குறிப்பிட்ட ஆட்டோ சாரதி சாவகச்சேரிப் பகுதியில் வைத்து வாடகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் திரும்ப வீடு திரும்பாமையைத் தொடர்ந்து யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இருந்தது சாவகச்சேரியைச் சேர்நத26 வயதான கந்தையா காண்டீபன் என்பவரே காணாமல் போனதாக முறையிடப்பட்டவராவர். இவருடைய ஆட்டோ சரசாலை பருத்தித்துறைப் பகுதியில் அநாதரவாக கைவிடப்பட்ட நிலையில் அடுத்த நாள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மனித உரிமைகள் ஆனைக்குழுவினர் எடுத்த முயற்சி காரணமாக குறிப்பிட்ட நபர் படுகாயம் உற்ற நிலையில் மீட்க்கப்பட்டு சாவகச்சேரிப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றத்தின் முன்னர் ஆஐர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யாழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.