Saturday, October 21, 2006

யாழ் மருத்துவமனைப் படுகொலை நினைவு தினம்

இந்திய இராணுவத்தால் 1987 ம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்படட வைத்தியசாலை வையித்தியர்கள் தாதிமார்கள் ஊழியர்கள் 21 பேரும் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களும் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தினம் இன்றாகும். இதனையிட்டு இன்று யாழ்ப்பாணம் போதனா வையித்தியசாலையில் ஊழியர்களை நினைவு கூறும் நிகழ்வு வைத்தியசாலை மண்டபத்தில் ஊழியர் தொழிற் சங்கத் தலைவர் க.பீரிஸ் தலைமையில் இடம் பெற்றது. இதில் இறந்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு நினைவுச் சுடரினை யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலை பதில் பணிப்பாளர் ஆர். இரத்தினசிங்கம் உட்பட மற்றும் உறவினர்கள் மற்றும் வைத்தியசாலை அலுவலர்களினால் ஏற்றப்பட்டு நினைவு கூறப்பட்டதுடன் அஞ்சலி நிகழ்வுகளும் இடம் பெற்றன. அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை பதில் பணிப்பாளர் இரத்தினசிங்கம் நிர்வாக அலுவலர் இ.பத்மநாதன் ஊழியர் மேற்பார்வை அலுவர் மு.கைலாயபிள்ளை உட்பட மற்றும் பலர் உரையாற்றினார்கள்.