Sunday, December 18, 2016

இலங்கையில் முக்கியஸ்தர்களை கொலை செய்ய திட்டமா? சீன நாட்டு பிரஜை கைது

குறிபார்த்து சுடும், மாப்பியாக்களுடன் தொடர்புடைய சீன நாட்டு பிரஜை ஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் மிக முக்கியஸ்தர்களை கொலை செய்யத் திட்டமிட்டாரா என்பதனை உறுதி செய்து கொள்ளும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பில் உள்ள பிரபல கெசினோ நிலையம் ஒன்றில் பணி செய்யும் Ni Ma Ze Ren என்ற சீன நாட்டு பிரஜையே குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். முதலீட்டுச் சபையில்...

32 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மாற்றம்...!

வடக்கில் இருந்து இந்தியா வரை பயணிகள் கப்பல் ஒன்று செல்வதற்கு 32 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 2ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரை தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவாதிரை திருவிழாவில் கலந்து கொள்ள வடக்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.  இந்நிலையில், கப்பல் ஊடாக பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்முறை திருவிழாவில் 2000 பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.  அதற்கு கப்பல் ஒன்றில் பயணிப்பதற்கு...

பிரித்தானியாவில் 19 மீற்றர் உயரத்திற்கு எழுந்த பேரலை! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

உலக வரலாற்றில் இதுவரை பதிவாகாத மிகப்பெரிய கடல் அலை வடக்கு அட்லாண்டிக் கடலில் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐஸ்லாந்து மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான பிராந்திய கடல் மட்டம் திடீரென 19 மீற்றர் வரை உயரமாக எழுந்ததாக உலக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்த பேரலையானது 6 மாடி கட்டடம் ஒன்றிக்கு சமமானதென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் 81 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்றினால் இவ்வாறு கடல் அலை...

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டுவர அனுமதி

இலங்கையர்கள் அரசு அறிவிக்காது வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டுவர அனுமதி வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதனடிப்படையில், சட்டவிரோதமான முறையில் அல்லாமல் நேர்மையான முறையில் சம்பாதித்து வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ள பணத்தை நாட்டுக்குள் கொண்டுவர இலங்கையர்களுக்கு அனுமதி கிடைக்கும். சுவிஸ் வங்கிகள் மற்றும் பனாமா பத்திரிகைகளில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களும் தமது பணத்தை இலங்கைக்கு...

அடுத்த ஆண்டு முதல் 1000 இலத்திரனியல் பேருந்துகள் சேவையில்.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இணைத்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள மின்சாரத்தில் ஓடும்(இலத்திரனியல்) பேருந்து சேவைகளை அடுத்த வருடம் ஆரம்பத்தில் தொடங்கவிருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக இலங்கை போக்குவரத்துச் சபை 500 பேருந்துகளையும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் 500 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன...

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வாகன விபத்து; பத்து பேர் வரை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் சிக்கி 3 பெண்களும் 7 ஆண்களும்...

Saturday, April 04, 2015

இந்தியப் பிரதமர் மீனவ பிரச்சினைகளில் தலையிட வேண்டும்: ராமதாஸ், கருணாநிதி வலியுறுத்து

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள வங்ககடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமையுண்டு என்பதை இந்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இன்றைய தினம் இந்திய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பில் 40 வருடங்களுக்கும் மேலாக பிரச்சினைகள் நீடித்து வருகின்றன. கச்சதீவை...

இலங்கையர்களுடன் செங்கடலில் பயணிக்கும் இரகசிய கப்பல்கள்!

அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனம் சர்வதேச ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிநாடுகளில் செயற்படும் பல்வேறு அமைப்புகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தமை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. எகிப்திற்கு அருகில் செங்கடல் பகுதியில் இந்த பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியங்களுடன் கூடிய இரு கப்பல்கள் இருப்பதாக, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு கப்பல்களில் ஒன்று சவூதி...

Thursday, January 08, 2015

ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது முடிவு - கிளிநொச்சி மாவட்டத்தில் மைத்திரி அமோக வெற்றி

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன் முதலாவது தேர்தல் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்துக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 38856 மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 13300 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1940 மொத்த வாக்குகள் - 53796...

Thursday, October 02, 2014

17 ஆண்டுகள்... அதிர்வலைகள்!

17 ஆண்டுகளைத் தாண்டியும் தடதடத்துக்கொண்டிருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அதிரடியாக முடித்து வைத்துவிட்டார். வழக்கு கடந்துவந்த 17 ஆண்டுகளைப் பற்றிய பருந்துப் பார்வை இது... 1. முட்டாள்கள் தின காமெடி! 1995, ஏப்ரல் 1... அப்போதைய, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ஒருசில பத்திரிகையாளர்களை சென்னையில் தனது அலுவலகத்துக்கு வரவழைத்திருந்தார். சுவாமியின் வழக்கமான அரசியல் செய்தியாக இருக்கும் எனச் சென்றவர்களுக்குக்...

ஜெயலலிதாவை பெங்களூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக திட்டம்?

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக வழக்கறிஞர்கள் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெயலலிதா சரி என்று கூறி விட்டால் அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவுள்ளனர். கைதியின் உடல் நலம், பாதுகாப்பு, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி சம்பந்தப்பட்ட சிறை அதிகாரியிடம் இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கலாம். அவர் பரிசீலித்து கைதி விரும்பும்...

இனி என்ன ஆவார் ஜெயலலிதா?

ஆரம்பத்திலேயே எங்க குடும்பம் ரொம்ப வசதியாக இருந்தது, ரொம்பப் பணக்காரக் குடும்பம். அப்போது இருந்த அந்தச் சொத்து அப்படியே நிலைச்சு இருந்திருந்தால், எங்க அம்மாவும் நடிக்க வந்திருக்க வேண்டாம், நானும் சினிமாவில் நடிக்க வந்திருக்க வேண்டாம்! இப்படிச் சொன்னவர் ஜெயலலிதா! தங்களின் அரசியல் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்காத உங்களது தாயாரின் நினைவுகளைச் சொல்லுங்கள்...’ என ஒருமுறை ஜெயலலிதாவிடம் கேட்டபோது, அம்மா இருந்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது....

Saturday, February 22, 2014

எமது குரல் உலகெங்கும் கேட்க நாம் ஓயாமல் போராட வேண்டும்! வை.கோ ஜெனீவாவுக்கு அழைப்பு!

மார்ச் 10 திகதிக்கு ஜெனீவா திடலுக்கு திரண்டு வாருங்கள் ,இதுவரை ஜெனீவா இப்படியான மக்கள் சங்கமத்தை சந்தித்திருக்க முடியாத அளவில் அணிதிரள்வோம். உலகம் திகைக்க வேண்டும் , திடுக்கிட வேண்டும். எமது குரல் உலகெங்கும் கேட்கும் வகையில் நாம் ஓயாமல் போராட வேண்டும். வை. கோபால்சாமி அழைப்பு...

Monday, January 27, 2014

வடக்கில் சமாதானமாம் - கோத்தாபாய கூறுவதை நம்ப உலகத் தலைவர்கள் முட்டாள்கள் அல்ல: - சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

வட மாகாண தமிழ் மக்கள் யுத்தம் முடிந்து நான்கு வரு­டங்­க­ளுக்கு பின்­னரும் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே வாழ்­கின்­றனர். இதனை உலகம் அறியும். எனவே, அங்கு சமா­தானம் நில­வு­வ­தாக பாது­காப்புச் செய­லாளர் கூறு­வதை நம்ப உலக நாடுகள் அதன் தலை­வர்கள் முட்­டாள்கள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், எம்.பி.யுமான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார். நாட்டில் சிங்­கள பெளத்த பேரி­ன­வாத சக்­தி­களை அர­சாங்­கமே தூண்டி விடு­வ­தா­கவும்...

நீயா-நானா நிகழ்வில் நீக்கப்பட்ட தலைவர் பிரபாகரனைப்பற்றிய கருத்துக்கள்!

நேற்றைய நீயா-நானா நிகழ்வில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. தோழர்.கி.வே.பொன்னைய்யனின் வாதங்கள் ஏனோ பதியப்படாமல் போனது வருத்தமளிக்கிறது. மிக நீண்ட நேரம் பதியப்பட்ட இந்த நிகழ்வு ஒளிபரப்பின் போது சுருக்கப்பட்ட காரணம் என்றாலும், குமரேசன்.அசோக் மற்றும் இன்னும் பிற நண்பர்களின் விரிவான வாதங்கள் பதிந்திருந்தால் விவாதத்தினை இன்னும் சிறப்பாக கண்டிருக்க முடியும். கி.வே பொன்னையனும்-குமரேசன் அசோக்கும் பல தகவல்களை விவாதித்திருந்தார்கள்.. எப்பொழுதும்...