சிங்களவர்கள் மட்டக்களப்பில் குடியேறுவதை தடுக்கக் கூடாது என்றும் அங்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயககமூர்தி முரளிதரன், அவ்வாறு தடுப்ப முயங்சிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடபடும் எனவும் எச்சரித்துள்ளார்.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கெவிளியாமடு பகுதியில் கால்நடை மேச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்களவர்கள் அத்துமீறி காணிகளை அபகரித்து அதில் விவசாயம் செய்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்துஅத்துமீறி காணிகளை அபகரித்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதேச செயலாளருக்கு கூறியபோது சிங்கள மக்கள் மட்டக்களப்பில் குடியேறுவதை தடுக்க கூடாது என கருணா என்று அழைக்கப்படும் பிரதியமைச்சர் முரளிதரன் அதை தடுத்து நிறுத்தியுள்ளார்.
சிங்களவர்கள் மட்டக்களப்பில் குடியேறுவதை தடுக்க கூடாது என்றும் அங்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மண்முனைமேற்கு பிரதேச செயலாளர் காரியாலயத்தில் இன்று சிறுபோக விவசாயிகளுக்கான ஆரம்ப கூட்டம் நடைபெற்ற போதே கருணா இதனைத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லைப் பகுதிகளில் குறிப்பாக வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவு எல்லைகளில் அத்துமீறி மேய்ச்சல் நிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள சிங்களவர்களை அங்கிருந்த வெளியேற்ற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மாவட்ட அரசாங்க அதிபரிடம் இக்கூட்டத்தில் வைத்து கோரிக்கை விடுத்தார்.
இந்த கூட்டத்தில் பிரதியமைச்சர் முரளிதரன், மாகாண சபை உறுப்பினர் துரைரத்தினம், மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப்புற எல்லையில் கால்நடைகளுக்குரிய மேச்சல் தரையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்களவர்களால் அத்துமீறி விவசாயம் செய்வதுடன் அங்கு வேலிகளும் அமைக்கப்படுவதாக விவசாயிகள் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினர்.
இந்த விடயம் அபாயகரமாதென்றும் இதை ஆரம்பத்திலே தடுக்க வேண்டும் என்றும் இதற்காக அரசாங்க அதிபர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்
ஆனால் இதில் குறுக்கிட்ட பிரதியமைச்சர் முரளீதரன் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டாம் என தடுத்தார்.
இதேவேளை கெவிளியாமடு போன்ற இடங்களில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு என்ற போர்வையில் பெருந்தொகையான சிங்களவர்களை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளீதரன் குடியேற்றி வருவதாகவும் வவுணதீவு பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தனது பிரத்தியேக செயலாளரான சிங்கள பெண்மணி ஊடாக இந்த சிங்கள குடியேற்றத்திற்கு ஊக்கம் அளித்து வருகிறார் என்றும் மட்டக்களப்பு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.