ஊகங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் கருத்துக்களை வெளியிடக் கூடாது என இந்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் நாட்டில் மூன்று விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாக அண்மையில் பிரதமர் டி.எம். ஜயரட்ன வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்படாத ஊகங்களின் அடிப்படையிலான தகவல்கள் தொடர்பில் இலங்கை பதற்றமடையத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பிரதமரினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து துரதிஷ்டவசமானது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஸ்ரீ விஷ்ணு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் நாட்டில் புலிகளின் பயிற்சி முகாம்கள் காணப்படுவதாக இலங்கைப் பிரதமர் வெளியிட்ட கருத்துக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.